அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் வசமிருந்து கைப்பற்றப்பட்ட 150 கோடி மதிப்புள்ள நகைகள் தற்போது ஏலத்தில் விடப்படவிருக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஃபெர்டினாண்ட் மார்கோஸ் 1986 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து, அவர் வசம் இருந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.