நாட­ளா­விய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில்  பதி­வான  மழை­வீழ்ச்சி 75 மில்­லி­மீற்­றரைத் தாண்­டி­யுள்­ளதால் 8 மாவட்டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்­கை­யினை தேசிய கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் விடுத்­துள்­ளது. 

அதற்­கி­ணங்க கேகாலை, இரத்­தி­ன­புரி, குரு­நாகல்,பதுளை, கண்டி, மாத்­தளை, கொழும்பு, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

களுத்­து­றைக்கு மண் சரிவு தொடர்பில் சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தவிர கொழும்பு – அட்டன் பிரதான வீ­தியில் சிறு சிறு சரி­வுகள் பதி­வா­கின.    இரத்­தி­ன­பு­ரியில் அய­கம, நிவித்­தி­கல, கொலன்ன, கல­வான, கிரி­எல்ல, பெல்­ம­துளை, காவத்தை ஆகிய  பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­ப­கு­தி­களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கு­மி­டத்து மண் சரிவு அனர்த்தம் ஏற்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மண்­ச­ரி­விற்­கான முன் அறி­கு­றிகள் தென்­படும் இடங்­க­ளி­லுள்­ள­வர்கள் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறும், மேற்­சொன்ன மாவட்­டங்­களில் தொடர்ந்தும் மழை­பெய்­யு­மாக இருந்தால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாக இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களை வேண்டிக்கொண்டுள்ளது.