இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இதுவரை 4 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்களுடைய பெயர் விபரங்கள் கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் இன்றைய தினத்திற்குள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முறையிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.