காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ ஆட்சியிலும் கட்சியிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். கட்சி அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்கள் உள்ளது. மு க ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்.

 அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தினமும் நடத்தி வருகிறார். காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலின் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ’ என்றார்.