லெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லெபனானின் பெய்ரூட் நகர வீதியோரத்தில் பாத்திமா என்ற 52 வயதுடைய யாசகம் கேட்கும்  பெண் கைவிடப்பட்ட காரொன்றிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் அவரது பையை சோதனையிட்டபோது இலங்கை ரூபா மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபா பணத் தன்னுடன் வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

மேலும் அவரது பையில் அவரின் பெயரில் வங்கிகணக்கு ஒன்றும் இருந்துள்ளது அதனை சோதனையிட்ட பொலிஸார் அதில் எழரை கோடி ரூபா வரவு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.