தென்கொரிய நாட்டைச் சேர்ந்த எல்.ஜி.குழுமத்தின் தலைவர் போன் மூ நேற்று காலமானார்.

73 வயதுடைய அவர் கடந்த ஒருவருட காலமாக உடல் நலக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிலையில் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.ஜி.நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.