ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்று இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்  ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரஷ்யாவிலுள்ள சோச்சி நகரில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்புக் குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "நண்பர்களான ரஷ்ய மக்களுக்கு வாழ்த்துக்கள். சோச்சி பயணத்தில் ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்" என  ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு தொடர்பில் ஆராயப்படுவதுடன் ஈரான் அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியதன் காரணத்தினால் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார விளைவுகள் என்பவை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.