தென்மாகாணத்தில் பரவிவரும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக அங்குள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மூடுவதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை , குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட மருத்துவ குழுவொன்று கொழும்பிலிருந்து அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் இறுதியில் குறித்த வைரஸ் இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.