இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

கிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி கிரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரிலே சரத் பொன்சேகா கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.