நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா சாமிமலை தோட்டபகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் பாதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள கால்வாய் ஒன்று பெருக்கெடுத்ததன்  காரணமாக 10 குடியிருப்புக்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கபட்ட 10 குடும்பங்களும் மஸ்கெலியா சாமிமலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.