மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் இலங்கை அணி மோத­வி­ருந்த 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரானது இரண்டு போட்­டி­க­ளாக குறைக்­கப்­ப­டக்­கூடும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அதே­வேளை கடைசி டெஸ்ட் போட்­டிக்கு பதி­லாக 3 ஒருநாள் போட்­டி­களில் விளை­யோ­டுவோம் என்று மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தற்­போது கடும் நிதி நெருக்­க­டியில் சிக்கி திக்­கு­முக்­கா­டிக்­கொண்­டி­ருப்­ப­துதான் இந்தப் போட்டி குறைப்­புக்­கான காரணம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

எதிர்­வரும் ஜூன் மாதம் இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்டு 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத­வி­ருந்­தது.

இந்தத் தொட­ருக்­கான 17 பேர் கொண்ட இலங்கை அணியும் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், தற்­போது 3 போட்­டி­களை இரண்­டாக குறைத்து அதற்கு பதி­லாக 3 ஒருநாள் போட்­டி­களில் விளையா­டுவோம் என்ற புதிய அட்­ட­வ­ணையை முன்­வைத்­தி­ருக்­கி­றதாம் மேற்­கிந்­தியத் தீவுகள் சபை. இது குறித்து நாம் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உப­த­லை­வரும், சர்­வ­தேச தொடர்­களைக் கையாளும் அதி­கா­ரி­யான கே.மதி­வா­ண­னிடம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, 

மேற்­கிந்­தியத் தீவுகள் சபைக்கு ஏற்­பட்­டுள்ள நிதி நெருக்­கடி கார­ண­மாக ஒரு டெஸ்ட் போட்­டியை குறைத்து 3 ஒருநாள் போட்­டி­களில் ஆடு­வது குறித்து எம்­மிடம் ஆலோ­சனை கேட்­டி­ருந்­தனர்.

ஆனால் அது இன்னும் முடி­வா­க­வில்லை. அநே­க­மாக அந்த போட்டி அட்­ட­வ­ணையில் நாம் விளை­யா­டக்­கூடும் என்றும் அவர் தெரி­வித்தார்.

அதே­வேளை ஒருநாள் போட்­டிக்­கான இலங்கை அணியும் எம்­மிடம் தயா­ரா­கவே இருப்­பதால் இதில் எந்த சிக்­கலும் எமக்­கில்லை என்றும் மதி­வாணன் குறிப்­பிட்டார்.

வெறு­மனே 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதைவிட 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுவது பார்வையாளர்களுக்கு உற்சாகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.