உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு ஒன்று இன்றும், நாளையும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

இவ் அமர்வில் நுவரெலியா பிரதேச பொது மக்கள் தங்களின் கருத்துகளை வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் பொது மக்கள் உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான 20 அம்சங்களை கொண்ட கோரிக்கைகளுக்கு சுருக்கமானதும் தெளிவானதுமான யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)