மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் பௌத்த துறவியென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை வயலில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் குருநாகல் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.