இளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை

Published By: Priyatharshan

19 May, 2018 | 10:23 PM
image

இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹரி (33) க்கும் மேகன் மார்க்லேக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரச குடும்ப திருமணத்தை ஒட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. 

திருமணத்தில் மணமகள் மேகன் மார்க்லேயின் தந்தை தோமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை இடம்பெற்றது. அதனால் ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இளவரசர் ஹரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேட்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். 

இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆலயத்தின் முன்னுள்ள திடலொன்றில நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்தில் திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த குதிரை வண்டியை விண்ட்சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து சென்றன.

வீதியோரங்களில் பிரிட்டன் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திக்கு இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52