முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த 3 வழக்குகளியிருந்தும்  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனது சொத்துக்கள் பற்றிய விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை என குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஷிராணி தரப்பினால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. 

அத்துடன் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.