இன்று பிற்பகல் 12மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக லெப்டிணன்ட் ஜெனரல் லக்ஸ்மன் கொப்பேகடுவ நினைவு தூபியில் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்னா தலைமையில் இராணுவம் வெற்றி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கொப்பேகடுவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் உயிரிழந்த படையினர், பொதுமக்கள் அனைவருக்காகவும்  ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு உப தவிசாளர், வசந்தகுமார், உறுப்பினர் சானுரா, தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துசாரா மற்றும் சகல கட்சி உறுப்பினர்களும் இனமத பேதமின்றி பெருமளவானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.