இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் “விசிஷ்ட சேவா விபூஷண“  பதக்கம்  வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சிறப்பு சேவைக்காக விசேட விருதாக கருதப்படுவதுடன், லெப்டினன் கெர்ணல் மற்றும் அதற்கு சமனான  கடற்படை,  விமானப் படைகளில் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கும்,  25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவை பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரமே  இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. 

குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் முப்படைகளில் தற்போது சேவையாற்றும் மற்றும் இளைப்பாறிய அதிகாரிகள் 50 பேருக்கு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது. 

முதலாவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரனசிங்க மற்றும் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கு ஜனாதிபதியினால் பதக்கம் வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இன் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.