இந்தியாவின்  குஜராத் மாநிலத்தில் சீமேந்து மூட்டைகளை  ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீமேந்து மூட்டைகளை  ஏற்றி சென்ற லொறி  மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். 

குறித்த லொறியானது பாவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் லொறி  மேல் பலர் அமர்ந்து பயணம் செய்தவர்களில்  19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு  படுகாயமடைந்த 7 பேரை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.