நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் சென்று திரும்பிய மக்களுக்கு புதுக்குடியிருப்புப் பகுதியில்  கூடாரம் அமைத்து நீராகாரம் வழங்கியுள்ளனர் முல்லைத்தீவு இராணுவத்தினர்.

 குறித்த ஏற்பாட்டை  682 படைப்பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர் .

இதுதொடர்பில் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை வினவியபோது,

இன்று இங்கு கர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதால் நினைவேந்தலுக்கு சென்று திரும்பும் மக்களின் களைப்பையாற்றுவதற்காக இவ் ஏற்பாட்டை செய்ததாகவும், நாம் விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள், மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களுக்காக நினைவேந்தல் செய்து திரும்பும் இவர்களுக்கு தாகம் தீர்க்கும் செயற்ப்பாட்டை செய்யவேண்டியது எமது கடமை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.