கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வு காணப்படும் வரை பலவீனமான தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் முக்கிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அறியாமையுடைய தகுதியற்ற தென்கொரியா என தெரிவித்துள்ள அதிகாரி அமெரிக்க தென்கொரிய விமானப்படையினரின் ஒத்திகையை கண்டித்துள்ளார்.

வடகொரியாவின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியா தென்கொரியா மத்தியிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இரத்துசெய்யப்படுவதற்கான விவகாரங்களிற்கு தீர்வு காணப்படும் வரை தென்கொரியாவின் தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.