இந்தியாவின் உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொரி மோதியதில் 10  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை பாரியெரல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்த மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் தேடிவருகின்றனர்.