(இராஜதுரை ஹஷான்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை  வடக்கு, கிழக்கு பகுதிகளில் துக்க தினமாக அனுஷ்டிப்பது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு சாதகமாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் .

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடகிழக்கில் அப்பாவி  பொதுமக்கள் கொல்லப்பட்டமையானது வருந்தத்தக்க விடயம். ஆனால் தற்போது வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் யுத்தத்தினை காரணம் காட்டி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த உறவினர்களுக்கு அவர்களின் உறவினர்கள் அனுதாபம் தெரிவிப்பது இயல்பான விடயம். இதனை சட்டத்திற்குள் வரையறுக்க முடியாது.

ஆனால் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் ஆயுதமேந்தி போராடிய விடுதலைப் புலி போராளிகளை நினைவுபடுத்துவது நாட்டுக்காக போராடி உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை அவமானப்படுத்துவதாக அமையும் என்றார்.