கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

19 Nov, 2015 | 04:24 PM
image

கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 AIA General Insurance

நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்கும் AIA பிரீமியர் கிரிக்கெட் தொடர் 11 நாட்கள் வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறுகின்றது. குழுமட்ட போட்டிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறும்.

முதலாவது அரையிறுதிப் போட்டி டிசம்பர்  மாதம் 23 ஆம் திகதியும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 24 ஆம் திகதியும் இடம்பெறும் . இறுதிப் போட்டி டிசம்பர்  மாதம் 30 ஆம் திகதியும் இடம்பெறும்.

இத் தொடரில் Colts, RAgama, Nondescripts, Colombo, SLPA, Saracens Sports Club, Tamil Union ஆகிய கழகங்கள் குழு “ஏ”  யிலும் SSC, Moors, Army, Bloomfield, BAdureliya, Chilaw Marians, Galle Cricket Club ஆகியன குழு “பி” யிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குழுமட்டப் போட்டிகளின் இறுதியில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இப் போட்டித் தொடருக்கு பிரதான அனுசரணையை AIA காப்புறுதி நிறுவனம் வழங்குகிறது.

இதேவேளை, AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் AIA காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷா ரவூப்  கருத்துத் தெரிவிக்கையில்,

உள்நாட்டு திறமைகளை அபிவிருத்தி செய்வதில் நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ள AIA நிறுவனம் தேசிய அளவில் கிரிக்கெட் ஆட்டத் திறமைகளை வளப்படுத்தும் இந்த போட்டித் தொடருக்கு அனுசரணையாளராக இருப்பதில் பெருமை அடைகின்றது.

அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் AIA காப்புறுதி நிறுவனம் உத்தியோகபூர்வ காப்புறுதியாளராக திகழ்கின்றது. 

இப் போட்டியில் நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்று விளையாடுகின்றன. இதற்கு தாமதமில்லாது உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டினை பாதுகாக்கவும் உயர்நிலைப்படுத்தவும் தாம் ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பிரகாஷ் சாப்டர் கருத்து வெளியிடுகையில், 

மிகவும் சந்தேஷமாகவுள்ளது. அனுசரணை வழங்குவதற்கு  பல காரணங்கள் உள்ளன. வீரர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. அனுசரணை வழங்க AIA  காப்புறுதி நிறுவனம் எடுத்த முடிவு சரியானதென நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி கருத்துத் தெரிவிக்கையில்,

கழகங்களுக்கிடையில் இடம்பெறும் பிரீமியர்  தொடர்கள் என்பது முதுகெலும்பு போன்றது. இதனால் சர்வதேச கிரிக்கெட் தொடர் பாதிப்படையாது. அதற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.

கழகங்களுக்கிடையிலான போட்டியின் போது சர்வதேச தொடர்கள் இடம்பெறும் போது பெரும்பாலும் பின்நிலை  வீரர்களுக்கு கழக போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51