கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார்  கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்தாரை மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி  நடந்த ஆரப்பாட்ட பேரணி மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்தாரை மேற்கொள்ளப்பட்டமையால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.