அதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி

Published By: Digital Desk 7

17 May, 2018 | 05:06 PM
image

இன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.

இரத்தத்தில் யூரிக் அமில படிகங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் ஹைப்பர்யூரிக்கேமியா என்று குறிப்பிடுவார்கள். இந்த பாதிப்பு கால் விரல்கள், பெருவிரல் இணைப்பு, கைவிரல்கள், கணுக்கால், கால் மூட்டு என உடலில் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம். 

பொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்கள் மற்றும் அதன் கூறுகள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படாத யூரிக் அமில கூறுகள் சிறுசிறு கற்களாகி சிறுநீரகத்தில் தங்கி விடும். ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு பாரம்பரிய மரபணு கோளாறுகளாலும் ஏற்படலாம்.

இதற்கு மருத்துவர்கள் அதிகளவு தண்ணீரை அருந்துவது தான் சரியான நிவாரணம் என்று அறிவுறுத்துகிறார்கள். தண்ணீர் தான் இந்த யூரிக் அமில கூறுகளை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. அதே சமயத்தில் புரதச்சத்து அதிகமுள்ள உணவுவகைகள், துரித உணவுகள், மது ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

அதே போல் செர்ரி பழங்களையும், செர்ரி பழச்சாறுகளையும் அருந்துவதால் யூரிக் அமில கூறுகளால் ஏற்படும் பாதிப்பு குறையும். அத்துடன் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பராமரித்தால் கௌட் எனப்படும் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்.

வைத்தியர்  ராஜ்கண்ணா,

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29