இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு பிரிட்டிஷ் ரக்பி வீரர்களின் மரணம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ள அதேவேளை, அவர்கள் இரவுவிடுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட  பின்னர் மரணமான ரக்பி வீரர்களில் ஒருவரான தோமஸ் பட்டி  இறப்பதற்கு முன்னர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தான் பிரவுன்சுகர் பயன்படுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு பிரிட்டிஷ் வீரர்களில் ஒருவரான தோமஸ்ஹவார்ட் மூச்சுதிணறல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். மற்றைய வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தோமஸ் பட்டியின் உடல் நேற்று பிரதேச பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையே இந்த இரு மரணங்களிற்குமான காரணம் என்ற கோணத்தில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.