இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தரைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக  தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரேம் லெப்ரோய் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடுவருமாவார்.

மேலும் கிரிக்கெட் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.