பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழாவானது இன்று காலை 8 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் பொலிஸ்மா அதிபரின் வழி நடத்தலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

குறித்த விளையாட்டுப் போட்டியில் வட மாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

இன்று 17ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதியில் இடம்பெறவுள்ள இவ் விளையாட்டு விழா வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோவின் ஏற்பாட்டில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் அறுவுறுத்தலின் பேரில் இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. 

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும்  வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந் நிலையில் 19 ஆம் திகதி 6 பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸாரின் அணிவகுப்பும் நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.‌