நாட்டில் தற்போது அரசாங்கத்தினால் எரிபொருட்களிற்கு விலையேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி உரிமை கோரிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியாவின் நகர பகுதிகள் உட்பட்ட பல பகுதிகளில் எரிபொருட்களுக்கு விலையேற்றப்பட்டுள்ளதையடுத்து, “அநீதியான முறையில் விலையேற்றப்பட்டுள்ள எரிபொருள் விலையை உடனடியாக குறைத்துவிடு” என வாகசம் தாங்கிய தமிழ், சிங்கள சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.