நாட்டில் பெய்து வரும் கடுமழையை அடுத்து தெதுரு ஓயா நீர்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

இதனால் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

குறிப்பாக சிலாபம், பாலம மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன்,  இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.