14 வயது,வெசல் சேக் ஹலீல்(Wesal Sheikh Khalil ) ஏற்கனவே தனது மரணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்பினர் தன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டால் தான் சுடப்பட்ட இடத்தில் தன்னை புதைக்குமாறும் இல்லையென்றால் தனது  பேரனின் கல்லறைக்கு அருகில் புதைக்குமாறும் அந்த சிறுமி தாயை கேட்டிருந்தார்.

அவள் வாழ்வை விட மரணம் சிறந்தது என எண்ணினால் என தெரிவிக்கின்றார் தனது இளைய மகளை இழந்துள்ள ரீம் அப்துல் இர்மானா.

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஒவ்வொரு தடவையும் தான் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்படவேண்டும் என  அவள் பிரார்த்தனை செய்தார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்பினர் திங்கட்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களில் அந்த சிறுமியும் ஒருவர்.

இவருடன் இன்னொரு எட்டு மாத குழந்தையும் இறந்துள்ளது என காஸாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்ணீர் புகை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அந்த குழந்தை இறந்துள்ளது.

சக்கரநாற்காலியில் இருந்து கல்லெறிந்த இரு கைககளையும் இழந்த நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பலஸ்தீனியர்கள் கடந்த சில வாரங்களாக காஸா எல்லையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

தங்கள் வரலாற்றில் மிகவும் துயரமான நாளான மே 15 குறிக்குமுகமாகவே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை  இழந்து அகதிகளான நாளை குறிப்பதே மே 15

அவர்கள் அதனை  அல்-நக்பா  அல்லது பேரழிவு என அழைக்கின்றனர்.

1948 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி இஸ்ரேல் சுதந்திரப்பிரகடனம் செய்தது. இதற்கு மறுநாள் ஆரம்பமான யுத்தத்தில் 750,000 அகதிகள்  தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்களோ அல்லது அவர்களின் வம்சாவளியினரோ தமது பகுதிகளிற்கு மீண்டும் திரும்பி வருவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

இவ்வாறு நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது.

ஐந்து மில்லியன் பலஸ்தீனியர்களை அகதிகள் என ஐநா அங்கீகரித்துள்ளது.

இவர்களில் அனேகமானவர்கள் ஜோர்தானில் வாழ்கின்றனர்.

மேலும் காஸா பள்ளத்தாக்கு  மேற்கு கரை சிரியா லெபனான் கிழக்கு ஜெருசலேமிலும் இவர்கள் வாழ்கின்றனர்.

தங்கள் பகுதிகளிற்கு மீள திரும்புவதே பலஸ்தீனியர்களின் முக்கிய கோரிக்கையாக காணப்படுகின்றது ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரிக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் பாலஸ்தீனியர்கள் நக்பாவை குறிப்பதற்காக ஆர்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு இடம்பெற்ற  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிறுமியே இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி மரணித்துள்ளார்.

14 வயதான அந்த சிறுமி காஸா எல்லையை நோக்கி இடம்பெற்ற பேரணிகள் -ஆர்ப்பாட்டங்களால் ஈர்க்கப்பட்டால் - அந்த சூழலில் உயிர் துறக்க விரும்பினால்.

ஓரு தசாப்த காலத்திற்கு மேலாக காஸாவிற்கு பொருட்கள் சேவைகள் செல்வதை இஸ்ரேலும் எகிப்தும் கடுமையாக தடுத்துள்ளதால் தனது பிள்ளைகள் வாழ்க்கையில் பெரும் நெருக்கடிகளை சந்தித்தனர் என தெரிவிக்கின்றார் அபு இர்மானா.

வாடகை கொடுக்க முடியாததால் நாங்கள் அடிக்கடி வீடுமாறுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள கிராமமொன்றே தங்களது சொந்த ஊர் என தெரிவிக்கும் அந்த குடும்பத்தினர் தாங்கள் அங்கு ஒருபோதும் செல்லவில்லை என்கின்றனர்.அவர்கள் மூன்று தலைமுறைகளாக காஸாவின் முகாமொன்றிலேயே வாழ்கின்றனர்.

தனது மகள் காஸாவிற்கு அப்பால் வேறு எங்கும் ஒருபோதும் சென்றதில்லை என தெரிவிக்கும் சிறுமியின தாய் தனது மகளை எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுபவள் என்கின்றார்.

தனது தாயின் பிறந்தநாளிற்காக பாடலொன்றை எழுதியுள்ள வெசல் அதனை பாடித்திரிந்தால் என தாய் நினைவுகூறுகின்றார்.

எனது மகன் மகளை ஆர்ப்பாட்டத்திற்கு போகவேண்டாம்  போனால் காலை முறிப்பேன் என வேடிக்கையாக தெரிவித்தான் ஆனால் அவள் அப்போதும் உறுதியாகயிருந்தால், ஓரு காலை உடைத்தாலும் நான் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வேன்  இரண்டு காலையும்  உடைத்தால்ஊர்ந்து செல்வேன் என அவள் தனது சகோதரனிடம் தெரிவித்தால் என தாய் நினைவுகூறுகின்றார்.

தனது சகோதரி சுட்டுக்கொல்லப்பட்டவேளை அவரிற்கு அருகில் இருந்ததாக தெரிவிக்கும் 11 வயது சகோதாரன் காஸா எல்லையில் சிறுமியின் தலைமீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என குறிப்பிட்டான்.

நன்றி - கார்டியன்

தமிழில் ரஜீபன்