தன்னுடைய கல்லூரி காலத் தோழரும், பாடகருமான அருண்ராஜா காமராஜின் டிஜிட்டல் செல்லூலாயிட் "கனா"வை நிறைவேற்றியிருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரில் தொடங்கியிருக்கும் புதிய பட நிறுவனத்தின் மூலம் முதல் படமாக "கனா" என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட்டை முதன்மைப்படுத்தியிருக்கும் இந்த படத்தின் பணிகள் பெயரிடப்படாமல் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன.

தற்போது படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் படத்திற்கான பெயர் மற்றும் முதல் பார்வையை  தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசின் ரசிகர்களும் இதனை பெரிய அளவில் வரவேற்றிருக்கிறார்கள்.