வெலிகம பிரதேச சபை தலைவர் , உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வெலிகம பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், பாலத்தின் பெயர்ப்பலகைக்கு சேதம் ஏற்படுத்தி, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கிணங்க குறித்த இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்ய முயற்சித்த போது, வெலிகம பிரதேச சபையின் தலைவரும் உப தலைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிகம பிரதேச சபையின்  தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரித்தனர்.