நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது.

இதன் காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் அவசரமாக திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது. 


அத்தோடு, கலாவெவ நீர்த்தேக்கத்தினதும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.