(என்.ஜீ.ராதாகிருஷ்ணன்)

இந்திய கடல் எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால்  இந்திய கடற்படையால்  கைது செய்யப்பட்ட  ஐந்து இலங்கை மீனவர்களை  இந்தியா விடுதலை  செய்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்திய கரையோர  பாதுகாப்பு கப்பல் அமயாவிலிருந்து  இலங்கை  கரையோர  பாதுகாப்பு  அதிவேக  தாக்குதல்  படகான  சி.ஜி. 402 இற்கு பாதுகாப்பான  முறையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  ஐந்து  மீனவர்களும்  இலங்கை கடற்படையால்  காங்கேசன்துறைமுகத்திற்கு  அழைத்து வரப்பட்டதன்  பின்னர்  யாழ்ப்பாண மீன்வள  பிரதிப்  பணிப்பாளரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.