புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஹிஜ்ரி 1439 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 இதன்போது நாட்டின் எப்பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.

 எனவே ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூரணப்படுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை புனித நோன்பு ஆரம்பிப்பதாகவும்  பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.