மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீ பற்றி சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

மன்னார் கரிசல் பகுதியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான முச்சக்கரவண்டி ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த பொழுது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

மன்னார் நகர சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பவுசரில் நீர் கொண்டு வந்தே குறித்த அணைக்கப்பட்டது.

குறித்த முச்சக்கர வண்டி முற்றாக எரிந்துள்ளதுடன் பயணிகள் எவரும் பயணிக்காததால் உயிர் சேதங்கள் ஒன்றும் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கே முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.