வஸீம் தாஜுதீன் விவகாரம்: சி.சி.ரி.வி. காட்சிகளை  ஆய்வுகளுக்கு அனுப்பும்  பணிகளின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதம் 

Published By: MD.Lucias

19 Feb, 2016 | 12:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சி.சி.ரி.வி.கண்காணிப்பு கமரா பதிவுகளை வெளி நாட்டு ஆய்வுகளுக்கு அனுப்புவது குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக குறித்த  சீ.சீ.ரி.வி. கண்­கா­ணிப்பு கமரா ஒளிப் பதி­வு­களை அமெ­ரிக்­கா, இங்­கி­லாந்து, கனடா உள்ளிட்ட பல முன்னணி நாடுகளின் ஆய்வகங்களிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்ப்ட்டுள்ளதாகவும் அதனை மையப்படுத்தி எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எந்த ஆய்வகத்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்ப்ட்டு அங்கு மிக விரைவில் அந்த வீடியோ ஆதாரங்கள் அனுப்படும் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும், அந்தக் காட்சி தெளிவின்மை காரணமாக, வசீம் தாஜுதீன் பயணித்த வாகனத்தினை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை ஆழமான ஆய்வுகளுக்காக வெளிநாட்டு தடயவியல் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் – குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி உத்தரவு வழங்கினார்.

ஆயினும், இதுவரை குறித்த இறுவட்டுக்கள் வெளிநாட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்படாமல், நீதிமன்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினரிடம், குறித்த காட்சிகள் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக் காட்சிகள் தெளிவற்றவையாக உள்ளமையினால், அவற்றில் பதிவாகியுள்ள வாகனத்தை அடையாளம் காண முடியவில்லையென, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதேவேளை, மேற்படி காட்சிகளை ஆழமான பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ. அல்லது ஸ்கொட்லான் யாட் பொலிஸாரின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினர் சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44