தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் சவால் விடுத்துள்ளது.

அவ்வாறு தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் ஆயிரத்து ஐந்நூறு அரச பஸ்கள் மற்றும் விசேட புகையிரத சேவைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிககையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.