(இரோஷா வேலு)

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த குறித்த பெண் சுமார் 77,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை தனது கைப்பையில் மறைத்து வைத்து கடத்த முயற்சித்த வேளையில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.