அரசின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விசேட செயலமர்வு

Published By: Priyatharshan

16 May, 2018 | 05:18 AM
image

அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுங்கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கி, திறைசேரி அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் விசேட ஒருநாள் செயலமர்வொன்றை நடத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய பொருளாதார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக அறிவூட்டுதல் மற்றும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் கூடியது. இதன்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

தேசிய பொருளாதார சபையின் ஊடாக முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், இணைந்த துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள குறுகிய கால, நீண்டகால அடிப்படையில் பெரும், நுண் மற்றும் கட்டமைப்பு சார்ந்த ஆகிய மூன்று பகுதிகளின் கீழ் இந்த மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்சித் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09