அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடந்த சில நாட்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் 

இதன் காரணமாக நேற்று திங்கட்கிழமை வோல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அவரது அலுவலக அதிகாரிகள் மேலும்  தெரிவித்தனர்.