(எம்.எம்.சில்வெஸ்டர்)

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக எச்.ரீ. கமல் பத்மசிறி அண்மையில் பதவியேற்றார். 

இம்மாதம் 2 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் கடந்த 12 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதற்கு அமையவே கமல் பத்மசிறி இந்த பதவியை பொறுப்பேற்றார்.

இலங்கை நிர்வாக சேவையில் 21 வருட காலம் சேவையாற்றிய அனுபவமுள்ள அவர், முகாமைத்துவம் மற்றும் புனர்நிர்மாணம் அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராகவும், இலங்கை  அதிஉயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

அத்துடன், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர்,  கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.