மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் பஸ்கொட, பெங்கமுவ மற்றும் ஹதுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 50 மற்றும் 53 வயதானவர்களே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.