சவுதி அரேபியாவில் பேரீச்சம் பழ அறுவடை குறைந்துள்ளமையினால் இலங்கைக்கு கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் தொகையும் குறைவடைந்துள்ளது.

ஆகவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தேவையான அளவு பேரீச்சம்பழங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ச.தொ.ச.விற்கும் நிதி அமைச்சுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

மேலும், ரமழான் பண்டிகை காலத்தின்போது பொதுவாக பள்ளிவாசல்களின் ஊடாகவே பேரீச்சம்பழங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதன்பிரகாரம் கடந்த வருடத்தில் இலவசமாக கிடைக்கபெற்ற பேரீச்சம்பழங்களில் பள்ளிவாசல்களின் ஊடாக 150 டொன்னும் ச.தொ.ச.வின் ஊடாக 150 டொன்னும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் சவுதி அரேபியாவில் பேரீச்சம் பழ அறுவடை குறைந்துள்ளமையினால் இலங்கைக்கு கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் தொகையும் குறைவடைந்துள்ளது.

எனவே  ச.தொ.ச.வின் ஊடாக தேவையான அளவு பேரீச்சம்பழத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யுமாறு ச.தொ.ச.விற்கும் பிரதமர் ஆலோசனை விடுத்துள்ளார்.