முறையான வேலைத்திட்டங்களோ முறையான முகாமைத்துவமோ இன்றி தற்போதைய அரசு அல்லற்படுவதுடன் நாடு பொருளாதார சரிவை நோக்கி நகர்வதாக மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்க தேரர் நியங்கொட விஜித்தசிரி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மல்வத்தை பீடத்திற்குச் சமுகமளித்து நல்லாசி பெற்ற போதே மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்க தேரர் மேற்கண்டவாறு இதனைத் தெரிவித்தார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஸ்ரீ தலதா மாளிகை, கெட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கெப்பட்டியாகொடை சிரிவிமல தேரர், அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கத்தேரர் வரகாகொடை ஞானரத்ன தேரர், பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் ஆகியோர்களையும் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொண்டார்.