பங்களாதேஷில் இவ்வருடம் நடைபெறவுள்ள 13 ஆம் ஆசியா கிண்ணம் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பிரதான அனுசரணையாளராக டயலாக் செயல்படவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேற்று  விளையாட்டு அமைச்சில் நடந்த நிகழ்வில் அந்நிறுவனம் வெளியிட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர்  தயஸ்ரீ ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஆசியா கிரிக்கெட் சபையின் தலைவர்  திலங்க சுமதிபால, இலங்கை இருபதுக்கு20 கிரிக்கெட் அணி தலைவர் லசித் மலிங்க, இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் கிரகாம் போர்ட்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.