உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவின், இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

முதலில் சாண்டா மரியா ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தற்கொலைதாரி வெடிகுண்டை வெடிக்கசெய்து உள்ளார்

. இதில் தற்கொலைதாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கிறிஸ்தவ 
தேவாலயங்களில்  தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர், போலீசார் உள்பட 41 பேர் காயம் அடைந்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.