(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது  ஜெனிவா  தீர்மானத்திற்கு  அமைவான சர்வதேச பொறுப்புக்கூறலின் தேசிய பொறிமுறை நகலையும் எடுத்துச் செல்லவுள்ளார்.   

இதன் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான துனை இராஜகாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உள்ளிட்டவர்களை வெளிவிவாகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

இதேவேளை வாஷிங்டனில் அமைந்துள்ள சமாதானத்திற்கான அமெரிக்க நிறுவனத்தில் இலங்கை தொடர்பில் விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான 6 வருடங்களின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தலைப்பில் விஷேட உரையை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்தவுள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை  இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.