(நெவில் அன்தனி)

ஜப்பானின் கிவு நகரில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையிலிருந்து 12 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

சுகததாச அரங்கில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்காக குறித்துரைக்கப்பட்ட அடைவு மட்டங்களை எட்டிவர்களே தெரிவாகியுள்ளதாக தெரிவுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அருண தர்ஷன, பசிந்து கொடிகார, பபசர நிப்பு, ரவிஷ்க இந்த்ரஜித், சந்துன் கருணாரட்ன (4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டம் ஆண்கள்), அமாஷா டி சில்வா, டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க, இஷாரா ஆதித்யா, சச்சினி திவ்யாஞ்சலி, சவிக்ரபாஷினி பண்டார (4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டம் பெண்கள்), தரிந்து தசுன் (உயரம் பாய்தல் ஆண்கள்), ரித்மா நிஷாதி அபேரட்ன (நீளம் பாய்தல் பெண்கள்) ஆகியோர் தெரிவாகியுள்ளனர். இவர்களில் அமாஷா டி சில்வா 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அருண தர்ஷன மற்றும் ஷ்யாமிலி ஆகியோர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.